ஈரோடு மார்க்கெட்டில்தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.10-க்கு விற்பனை


ஈரோடு மார்க்கெட்டில்தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.10-க்கு விற்பனை
x

கிலோ ரூ.10-க்கு விற்பனை

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.

காய்கறி மார்க்கெட்

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கு மேற்பட்ட காய்கறி கடைகளும், 200-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தினந்தோறும் 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து 30 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன.

தக்காளி விலை வீழ்ச்சி

காய்கறிகள் வரத்து அதிகரித்தன் காரணமாக நேற்று அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ரூ.25-க்கு விற்பனையான தக்காளி நேற்று விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் 2 கிலோ 3 கிலோ என தக்காளியை வாங்கிச்சென்றனர். இதேபோல் முருங்கைக்காய் விலையும் குறைந்து ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் நேற்று பச்சை பட்டணி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-க்கும், இஞ்சி ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

பாகற்காய் -ரூ.50, கேரட் -ரூ.50, பீட்ரூட் -ரூ.40, கத்திரிக்காய் -ரூ.30, புடலங்காய் -ரூ.40, அவரக்காய் -ரூ.50, பீர்க்கங்காய் -ரூ.70, முள்ளங்கி -ரூ.25, சவ்சவ் -ரூ.20 சேனைக்கிழங்கு -ரூ.50 முட்டைகோஸ் -ரூ.20, பச்சை மிளகாய் ரூ.60, பீன்ஸ் -ரூ70, வெண்டைக்காய் -ரூ.60, உருளை கிழங்கு -ரூ.20.


Next Story