பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்


பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில்  குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x

பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

ஈரோடு

டி.என்.பாளையம்

பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் "வில்லேஜ் விசிலன்ஸ் கமிட்டி" என்ற பெயரில் ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாணிப்புத்தூர், கே.என்.பாளையம், கொடிவேரி பேரூராட்சிகள் மற்றும் அரக்கன்கோட்டை, புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போலீசார், "ஊர்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகத்தின் பேரில் புதிய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டு்ம். தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்போர் குறித்து தகவல் தெரியும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.

மேலும் குடிபோதையில் பொதுமக்களிடத்திலோ, பொது இடங்களிலோ இடையூறு மற்றும் தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்'' என்றனர். கூட்டத்தில் பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story