அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், பர்கூர், கொளத்தூர், பண்ணவாடி, மேச்சேரி, எடப்பாடி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.2 லட்சம்

காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 லட்சத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருநது ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.


Next Story