அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 78 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 470-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 252-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 162-க்கு ஏலம் போனது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து நிலக்கடலையை வாங்கி சென்றனர்.


Next Story