அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 71 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்்தனர். இதில் நிலக்கடலை (பச்சை) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 313-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 757-க்கும் விற்பனை ஆனது. நிலக்கடலை (காய்ந்தது) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 10-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 810-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 605-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story