அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை கடந்த 9-ந் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு சாமிக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வருவதுடன், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த பூஜையில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளத்திருப்பூர், ஒலகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிைய வழிபட்டு செல்கின்றன.
இந்த பூஜை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. அன்றைய தினம் அஷ்டமி என்பதால் 1,008 மூலிகைகளை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.