அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி 3 ஆயிரத்து 500 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 959-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 315-க்கும் என மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போனது.

2 ஆயிரத்து 800 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18.53-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.24.13-க்கும் என மொத்தம் ரூ.57 ஆயிரத்து 967-க்கு விற்பனை ஆனது.

கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய் 75 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 669-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 169-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 6 மூட்டைகளில் எள்ளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.17 ஆயிரத்து 769-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.17 ஆயிரத்து 839-க்கும் என மொத்தம் ரூ.87 ஆயிரத்து 197-க்கு விற்கப்பட்டது. ஆமணக்கு 16 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று ஒரே விலையாக ரூ.6 ஆயிரத்து 729 என மொத்தம் ரூ.52 ஆயிரத்து 217-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி, சத்தியமங்கலம், மேட்டூர், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்களை வாங்கி சென்றனர்.


Next Story