ஆதிச்சநல்லூர், சிவகளையில்அகழாய்வு பணிகளை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆய்வு


ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகளை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆய்வு

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகளை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆய்வு செய்தார்.

முதன்மை செயலாளர் ஆய்வு

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், சைட் மியூசியம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை தமிழக அரசின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால பொருட்களையும் பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்தனர்.

சிவகளை

முன்னதாக சிவகளையில் நடந்த அகழாய்வு பணிகளையும் பார்வையிட்ட முதன்மை செயலாளர் உதயசந்திரன், அங்கு கிடைத்த பழங்கால பொருட்களையும் பார்வையிட்டார்.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் துறை ஆய்வாளர் யத்தீஸ்குமார், அகழாய்வு இயக்குனர்கள் பிரபாகர், தங்கத்துரை, ஆசைத்தம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story