ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்


ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் கூட்டம் ஏபிநாடானூரில் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார். அணைந்த பெருமாள் நாடனூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை என்ற அருணாச்சலம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி கலந்து கொண்டார். கூட்டத்தில், வருகிற 14-ந் தேதி கனிம வள கொள்ளையை தடுக்க கோரி கடையத்தில் நடைபெற உள்ள சிறுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, பொட்டல்புதூர் முதல் எல்லைப்புளி வரை சாலையில் குடிநீர் உடைப்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும். கனரக வாகனங்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஒழுங்குமுறை படுத்த வேண்டும். குண்டும் குழியுமான கீழக்கடையம் ெரயில்வே பீடர் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, கீழாம்பூர் மாரிசுப்பு, பாப்பான்குளம் முருகன், திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஊராட்சி செயலாளர் ராமர் கனி, யோவானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story