மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39 லட்சத்தில் உதவி உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39 லட்சத்தில் உதவி உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

137 பேருக்கு உதவி உபகரணங்கள்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்களை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

பல்வேறு திட்டங்கள்

தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் சிரமப்படக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஓராண்டில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் 37 ஆயிரத்து 660 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 கோடியில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 11 ஆயிரத்து 505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.360 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, உதவி கலெக்டர்கள்(மயிலாடுதுறை) யுரேகா, அர்ச்சனா (சீர்காழி), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story