மதுரை கஞ்சா விற்பனை செய்த குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்


மதுரை கஞ்சா விற்பனை செய்த குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
x

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர்.

மதுரை,

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை தடுப்பதற்காக 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யபடுவதோடு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த அடிப்படையில் ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன். இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில், காளை, அவரது மனைவி பெருமாயி ஆகியோர் போதை தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.5.5 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும் என தமிழக காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story