குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி - உதவி ஆணையர் கிருஷ்ணவேணி
சேலத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழிஉதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது
சேலம்
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது.
எதிர்ப்பு நாள் உறுதி மொழி
சேலம் தொழிலாளர் துறை சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி உதவி ஆணையாளர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. இதில் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் போலீசார், சைல்டுலைன் அமைப்பு ஆகியோருடன் இணைந்து, சேலம் 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்களா? என்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினர்.
எச்சரிக்கை
அதே போன்று கடைகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அந்தந்த நிறுவன உரிமையாளர்களிடம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினர்களை அபாயகரமான பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.