தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்
ஆரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது.
ஆரணி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக்கிளை பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்க அலுவலக கட்டிடத்தில் நடந்தது.
வட்டக்கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் பரசுராமன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சிவ.விஜயகுமார் வரவு, செலவு அறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் மு.தென்னரசு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.பிரபு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய வேண்டும். ஆரணியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். ஆரணிைய தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளர்களாக இருந்து 41 மாத பணி காலங்களை இழந்து தவிப்பவர்களுக்கு பணி காலமாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டக்கிளை துணைத்தலைவர் கு.சுரேஷ், துணைத்தலைவர்கள் ரமேஷ், தேவராஜ், இணை செயலாளர்கள் விஜயா, பழனி, மாவட்ட பொருளாளர் த.வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் மனோகரன், திருமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.சண்முகம் நன்றி கூறினார்.