வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்; 3 பேர் கைது
சாயர்புரம் அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர்
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியைச் ேசர்ந்தவர் ராம்குமார் (வயது 29). இவர் தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சம்பத் மகன் காமேஷ் (35) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.9 லட்சம் கடனாக வாங்கினர். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இந்த நிலையில் சம்பத் மற்றும் அவரது உறவினர்களான சாயர்புரத்தை சேர்ந்த பொன்ராஜா (31), சிவத்தையாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (31), சாயர்புரம் புளியநகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோர் சேர்ந்து ராம்குமாரை நேற்று முன்தினம் சம்பத்திற்கு சொந்தமான நந்தகோபாலபுரம் பகுதியில் உள்ள இரும்பு கடைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து ராம்குமாரை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதுகுறித்து சாயர்புரம் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமர் வழக்குப்பதிந்து, பொன்ராஜா, மாரிமுத்து, அருண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.