ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அரசூர் பூச்சிக்காடு பெருமாள்புரத்தை சேர்ந்த ஏசுவடியான் மகன் லிங்கத்துரை(வயது 53). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்றார். பின்னர் அங்கிருந்து
மீண்டும் ஆட்டோவில் குடும்பத்தினர் ஏற முயன்றனர். அப்போது ஆட்டோ அருகில் நின்று கொண்டிருந்த குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் குமாரபெருமாள்விளை மாியபிரான்சிஸ் மகன் ஆன்றோஸ் (33) என்பவர் செல்போனில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை லிங்கத்துரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லிங்கத்துரை மற்றும் அவரதுஉறவினரான சென்னை ஆதம்பாக்கம் பெரியார் நகர் முதல் தெரு அன்னமரியான் மகன் சேவியர் (48) ஆகியோர் லிங்கத்துரையை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து ஆன்றோஸ், சேவியர் ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்.