சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா
சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனிக்கோவில் கொண்டு சிம் ஹாருட வாராகி அம்மன் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆஷாட நவராத்திரி பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சிம்ஹாருட வாராஹி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிம்ஹாருட வாராகி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story