'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் - உதயநிதி ஸ்டாலின்


விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் - உதயநிதி ஸ்டாலின்
x

நடிகர் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதனால் பல்வேறு திரையரங்குகளிலும் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து படம் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆடி, பாடி படத்தை ரசித்து வருகின்றனர்.

இதநிலையில் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில்,

உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் #விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயின்ட்ஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் #விக்ரம் நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என பதிவிட்டுள்ளார்.


Next Story