புரட்டாசி மாதம் நெருங்குவதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்...!


புரட்டாசி மாதம் நெருங்குவதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்...!
x

புரட்டாசி மாதம் நெருங்குவதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னையில் காசிமேடு மீன் மார்க்கெட் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதும். சிறு வியாபாரிகள், உணவகங்களுக்கு மொத்தமாக மீன்கள் வாங்குவதோடு, விரும்பிய மீன்களை வாங்க பொதுமக்களும் காசிமேடு மீன் சந்தைக்கு படையெடுப்பார்கள்.

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் புரட்டாசி மாதம் நெருங்கு வருவதால் சென்னையில் உள்ள பல மொத்த வியாபாரிகளும் மீன் அசைவ பிரியர்களும் மீன்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்துள்ளனர். இதனால் காசிமேடு மீன்விற்பனை கூடத்தில், மக்கள் கூட்டம் பொங்கி வழிகிறது. திருக்கை, கடம்பா, வஞ்சிரம், சங்கரா, சூரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

டீசல் விலை உயர்வால் குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. மீன்கள் வரத்து குறைந்ததால் கனிசமான விலையில் மீன்கள் விற்கப்படுகிறன. பெரிய படகுகள் கடலுக்கு செல்லாததால் பெரிய அளவிலான மீன்கள் விற்பனைக்கு ஏதும் இல்லை.


Next Story