கோடைகாலம் நெருங்குவதால்விற்பனைக்கு குவிந்த தர்ப்பூசணி:கிலோ ரூ.20-க்கு விற்பனை


கோடைகாலம் நெருங்குவதால்விற்பனைக்கு குவிந்த தர்ப்பூசணி:கிலோ ரூ.20-க்கு விற்பனை
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோடைகாலம் நெருங்குவதால் கம்பத்தில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிந்தன.

தேனி

கோடை காலம் நெருங்குவதை முன்னிட்டு கம்பம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கம்பம் பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கம்பம் பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிந்தன. ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனையாகிறது. மொத்த விலை ஒரு கிலோ ரூ.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Related Tags :
Next Story