உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது


உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது
x

வாலிநோக்கம் பகுதியில் உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

வாலிநோக்கம் பகுதியில் உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது.

உப்பு உற்பத்தி

தமிழகத்தில் தூத்துக்குடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய ஊர்களில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை பத்தநேந்தல், தேவிபட்டினம் உள்ளிட்ட பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கிராமத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன.கோடை காலம் முடிந்த நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து மிக அதிகமாகவே இருந்து வருவதால் உப்பு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதத்திற்கு பின்பு வெயிலின் தாக்கம் குறைய தொடங்கி காற்று வீச தொடங்கி அவ்வப்போது மழை பெய்யும்.

விலை குறைவு

ஆனால் இந்த ஆண்டோ கோடை கால சீசன் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் உப்பு உற்பத்தியும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 டன் உப்பு ரூ.2500 வரை விலை போன நிலையில் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே விலை போகிறது.

வெயிலின் தாக்கத்தால் மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி அதிகரித்து வருவதால் கல் உப்பின் விலை குறைந்துள்ளது.வாலிநோக்கம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கல் உப்பு தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.


Related Tags :
Next Story