ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கம், சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஆறுமுகநேரி ஐ.என்.டி.யு.சி. திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு பேரவை தலைவர் வி. செல்வன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கொம்பையா, மாநில பேரவை அமைப்பு செயலாளர் எஸ்.தியாகராஜன், பொருளாளர் லட்சுமணன், பேரவை செயலாளர் எம்.எம். காப்பர் ஹசன், துணைத் தலைவர் ரமேஷ், துணை தலைவர் சோமசுந்தரம், முதன்மை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன் வரவேற்றார். மாநில செயலாளர் சிந்தா தொடக்க உரை நிகழ்த்தினார்.

விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாகுபுரம் டி.சி.டபிள்.யூ. தொழிற்சாலை மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, ஆழ்வார்திருநகரி யூனியன் குழுதலைவர் ஜனகர் ஆகியோர் பேசினர். பேரவை மாவட்ட செயலாளர் அப்துல்லா சாகிப் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேகர் விருதுகளை ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், வார்டு உறுப்பினர் சோ வெங்கடேஷ் ஆகியோர் பெற்றனர்.

மேலும் வரண்டியவேல் கிராம பஞ்சாயத்து தலைவி வசந்தி ஜெயக்கொடி, தென்திருப்பேரை தலைவர் சாரதா, பேரூராட்சி துணை தலைவர் அமுதவல்லி உட்பட பலருக்கு நுகர்வோர் பேரவை சார்பில் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவில், காயல்பட்டினம் தென்பாகம் எல்கையில் உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்துடன் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் பேரவையின் சார்பில் அடையாளம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆறுமுகநேரி ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story