அரசு பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி
அரசு பள்ளியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க ஆண்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர் ஜோசப் இருதயராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றி சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் பள்ளி உதவித் தலைமையாசிரியை விமலா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story