நாட்டுடைமையாக்கப்படும் கலைஞரின் படைப்புகள் - கனிமொழி எம்.பி. மகிழ்ச்சி
கலைஞரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படுவதை கனிமொழி எம்.பி. வரவேற்றுள்ளார்.
சென்னை,
கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆணை வழங்கினார். இதனை மக்களவை எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த எனது தாயார் ராசாத்தி கருணாநிதி அவர்களுக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனால் தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story