கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்


கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்
x

அகரகீரங்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாமில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன், ஊராட்சி தலைவர் கயல்வழி, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story