கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்


கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
x

குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான எஸ்.சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, பாரி, கோடீஸ்வரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எம்.எஸ்.அமர்நாத் வரவேற்றார்.

தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில கொள்கை பரப்பு துணைசெயலாளர் குடியாத்தம் குமரன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ்.பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் நத்தம் பிரதீஷ், அன்பரசன், முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி, நகரமன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், சி.என்.பாபு, எம்.எஸ்.குகன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நகரமன்ற உறுப்பினர் ஜாவித்அகமது நன்றி கூறினார்.


Next Story