கலை திருவிழா போட்டிகள் தொடங்கியது
அரியலூரில் கலை திருவிழா போட்டிகள் தொடங்கியது.
2022-23-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கலை திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, நடனம் உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் தொடங்கின. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வருகிற 28-ந்தேதி வரை பள்ளி அளவில் கலை திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது. 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பா்) மாதம் 5-ந்தேதி வரை வட்டார அளவிலும், டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மாவட்ட அளவிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.