ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர் கைது
பத்தமடை அருகே ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
பத்தமடையை அடுத்த கரிசூழ்ந்தமங்களம் நடுவூர் ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 39). இவர் அவருடைய மினி லோடு ஆட்டோவை வழக்கமாக நிறுத்தும் இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (31) என்பவர் அவருடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனை மனதில் வைத்துக் கொண்டு பெருமாள், கரிசூழ்ந்தமங்கலம் நடுவூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் அருகே வைத்து, பாஸ்கரை அவதூறாக பேசி அவருடைய லோடு ஆட்டோவின் கண்ணாடியை செங்கலால் எரிந்து உடைத்து சேதப்படுத்தினார். மேலும் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருமாளை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story