துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு


துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
x

கோர்ட்டில் ஆஜராகாத துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை சங்கர் தெருவைச் ேசர்ந்தவர் சாமுவேல் பொன்னுசாமி. ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக அம்பை போலீசார் விசாரிக்க சென்றதாகவும், அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறி, அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் உள்ளிட்ட 4 போலீசார் மீது சாமுவேல் பொன்னுசாமி அம்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த சுரேஷ் பெலிக்ஸ் பீட்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பல்கலைச்செல்வன் நேற்று உத்தரவிட்டார். சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் தற்போது மதுரை குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story