பாண்டமங்கலம் அருகேபெண்ணிடம் தகராறு செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது


பாண்டமங்கலம் அருகேபெண்ணிடம் தகராறு செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டு புதூரை சேர்ந்தவர் பெரியசாமி. இறந்து விட்டார். இவருடைய மனைவி செல்லம்மாள் (54). இவர் நேற்று தனது வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த 3 பேர் நிலைதடுமாறி செல்லம்மாள் வீட்டின் முன்பு கீழே விழுந்்தனர். அப்போது செல்லம்மாள் அவர்களிடம் பார்த்து வரக்கூடாதா என கேட்டாராம். அதற்கு 3 பேரும் சேர்ந்து செல்லம்மாளிடம் தகராறு செய்தனர். இதில் வாய்த்தகராறு முற்றவே செல்லம்மாளின் தலைமுடியை பிடித்து அறுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்ததை பார்த்து 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருகில் வந்தால் வெட்டி கொலைசெய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். எனினும் அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கொந்தளம் அருகே உள்ள பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் அருண்குமார் (20), கொந்தளம் வெங்கமேட்டுப்புதூரை சேர்ந்த அய்யப்பன் மகன் சரவணன் (22), மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story