எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது


எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது
x

எடப்பாடி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகாம்பாள் (வயது 65). அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் தனது கணவர் கலியபெருமாள் இறந்துவிட்ட நிலையில் மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி அன்று நாகாம்பாள் தனது மகள் வசந்தமாலாவுடன் மொபட்டில் எடப்பாடி பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் தாவாந்தெரு காளியம்மன் கோவில் அருகில் அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நாகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இது குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் போலீஸ் நிலைய எல்லையில் ஒரு நகை திருட்டு வழக்கில் கைதான கேரள மாநிலம் பாறைசாலை அருகே உள்ள தேவர் விளைவீடு பகுதியை சேர்ந்த செயது அலி மகன் யாசர் அராபத் என்கிற அர்பான் (21) என்பவர் எடப்பாடி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து எடப்பாடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் எடப்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story