சேந்தமங்கலத்தில்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது


சேந்தமங்கலத்தில்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் கருவண்டன் (வயது 38) கூலித்தொழிலாளி. சில மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் சாராய ஊறல் வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது கருவண்டன் தப்பி ஓடி தலைமறைவானார். அவர் வீட்டில் இருந்து 2 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த கருவண்டனை போலீசார் கைது செய்தனர்.


Next Story