கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய பிரபல திருடன் கைது


கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளியில்  மோட்டார்சைக்கிள்கள் திருடிய பிரபல திருடன் கைது
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய பிரபல திருடன் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளியில் மோட்டார்சைக்கிள் திருடிய பிரபல திருடன் கைது செய்யப்பட்டார்.

செயல் அலுவலர்

கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 56). இவர் தர்மபுரி வணிக வரித்துறையில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார்சைக்கிளை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து சந்திரசேகரன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதே போல பெத்த மேலுப்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை அருகில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து மணிகண்டன் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

திருட்டு வழக்குகள்

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரது பெயர் குமார் (45) திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பூங்குளம் பக்கமுள்ள வெள்ளபெரியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் அதிகாரி சந்திரசேகரன், மணிகண்டன் ஆகியோரிடம் மோட்டார்சைக்கிள்களை திருடியதும் குமார் தான் என தெரிய வந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர்.

கைதான குமார் மீது கந்திகுப்பம், போச்சம்பள்ளி, ஜோலார்பேட்டை, அணைக்கட்டு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story