கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேர் கைதுசூதாடியதாக 9 பேர் பிடிபட்டனர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேர் கைதுசூதாடியதாக 9 பேர் பிடிபட்டனர்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடிய 9 பேர் பிடிபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடிய 9 பேர் பிடிபட்டனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிறிஸ்துபாளையம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா, லாட்டரி

அதே போல மத்தூர், சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி, மகராஜகடை, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதிகளில் சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story