லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை நடக்கிறதா? என அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி கந்திகுப்பம், நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம், சிங்காரப்பேட்டை, கல்லாவி பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, கெலமங்கலம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story