குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது


குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2023 1:00 AM IST (Updated: 20 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறதா? என அந்தந்த பகுதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, நாகரசம்பட்டி, ஊத்தங்கரை பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 374 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி பழையபேட்டை பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற மாதேஷ் (36), அரசம்பட்டி அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற சரவணன் (56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story