வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
ஓசூரில் வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் தேர்ப்பேட்டை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 26). இவரிடம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக ஓசூரை சேர்ந்த பத்மா, ஓசூர் வள்ளலார் நகரை சேர்ந்த சிவா (50), ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி அட்கோ பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் ரூ.8 லட்சம் பெற்றனர். இதற்காக போலியாக ஆணையும் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆணை போலி என தெரியவந்ததும், வினோத்குமார் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத்குமார் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பத்மா, சிவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று சிவா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story