கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாககாரில் கடத்தப்பட்ட 337 கிலோ குட்கா பறிமுதல்வடமாநில டிரைவர் கைது

கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாககாரில் கடத்தப்பட்ட  337 கிலோ குட்கா பறிமுதல்வடமாநில டிரைவர் கைது
x

கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்தப்பட்ட 337 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வட மாநில டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்தப்பட்ட 337 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வட மாநில டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 337 கிலோ ஹான்ஸ், பான்பராக், பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம் பூசனா மாவட்டத்தை சேர்ந்த மனோகர் சிங் (வயது25) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் காரைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

மத்திகிரி

அதேபோல மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்தவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் குட்கா வைத்து இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலிப் (36) என்பதும், மத்திகிரி டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story