விழுப்புரம் மாவட்டத்தில் மரக்கன்று நடவு செய்ய ஏற்பாடு


விழுப்புரம் மாவட்டத்தில் மரக்கன்று நடவு செய்ய ஏற்பாடு
x

பசுமை தமிழகம் உருவாக்குதல் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்கன்று நடவு செய்ய ஏற்பாடு

விழுப்புரம்

விழுப்புரம்

பசுமை தமிழகம் உருவாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 23.69 சதவீதம் உள்ள பசுமை போர்வையை 33 சதவீதமாக உயர்த்த வேண்டி மாவட்டம் முழுவதும் 2022-23-ம் வருட நிதியாண்டில் 5 லட்சம் மரக்கன்று நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அனைத்து அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை வனவியல் வன விரிவாக்க மைய விளம்பர அலுவலர் முருகானந்தனை 94884 72656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story