ஈரோட்டில் ரெயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ரெயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் ரெயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு


அகில இந்திய ரெயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல இணைச்செயலாளர் சந்திர மனோகர் தலைமை தாங்கினார்.

ரெயில்வே லோகோ பைலட் உள்ளிட்ட அனைத்து துறை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரெயில்வே தனியார் மயத்தை கைவிட வேண்டும். பெண் தொழிலாளர்கள் மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும். டிரைவர்களை 36 மணி நேரத்துக்குள் மீண்டும் அவர்கள் பணியிடத்துக்கே அழைக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் பணிக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கோட்ட செயலாளர் சிவக்குமார், கிளைச்செயலாளர் ஸ்ரீஜித், தென் மண்டல துணைத்தலைவர் சுப்பிரமணியம் மற்றும் ரெயில் ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story