ஈரோட்டில் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு


ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவடிக்கைகளின் மீது தாமதமின்றி விசாரணை செய்து உரிய காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி இடைநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

ஓய்வூதியம் குறைதீர்வு கூட்டத்தை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் ஹரிதாஸ், ரவிசந்திரன், பன்னீர்செல்வம், பழனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story