அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்


அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்
x

காஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது.

திருவண்ணாமலை

செங்கம்

காஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது.

புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தணிக்கை உதவி இயக்குனர் கருணாநிதி கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, நிர்மலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்து அதிகாரிகள் சிறப்புரையாற்றினர். இதை தொடர்ந்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் சார்பில் சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொணங்ட பொதுமக்கள் தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகள், கால்வாய் வசதிகள், தெருவிளக்குகள் முழுவதுமாக செய்து தரப்படவில்லை எனவும் சரிவர குடிநீர் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறி சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுயது.


Next Story