அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்


அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:30 AM IST (Updated: 25 Jun 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் மற்றும் கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவில் பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பர் வீதி உலா வருதல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணம், வீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சப்தாவர்ணம், தெப்ப தேரோட்டம் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன் ஆலோசனையின் பேரில் நிர்வாக அலுவலர் கார்த்திசெல்வி மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story