அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆனி தேரோட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் சுவாமி என்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மையப்பன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேர் அலங்கார மண்டகப்படிதாரர் எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினர் சார்பில், தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து 5 மணி அளவில் நிலையம் வந்தடைந்து.
கலந்துகொண்டவர்கள்
விழாவில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் குடும்பத்தினர்கள், வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், தக்கார் முருகன், இந்து சமய அறநிைலயத்துறை ஆய்வாளர் சேதுராமன், கோவில் செயல் அலுவலர் கார்த்தி செல்வி, வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியின் தலைவர் கு.தவமணி, பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன், அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன், ஆதித்யா ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் அருள் மகேந்திர மூர்த்தி, நாடார் வர்த்தக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், சாமி பாத்திரக்கடை உரிமையாளர் இசக்கி ராஜா, சாமி டிரேடர்ஸ் உரிமையாளர் அய்யர், காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.கே.சித்துராஜூ, கே.மணிமுத்து நாடார் குடும்பத்தார்கள், வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் டிரேடர்ஸ் உரிமையாளர் என்.சீனிவாச கண்ணன், புளியங்குடி எஸ்.கே.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராமகிருஷ்ணன், அரசு ஒப்பந்தக்காரர்கள் ஏ.ராஜதுரை, பி.ராமர், வெளுத்துக்கட்டு பிரியாணி ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஐ.கணேசன், ராசீ பத்திர எழுத்தர் எம்.குமார், திருமுருகன் வாழைப்பழக்கடை உரிமையாளர் சிவக்குமார், திருவனந்தபுரம் எஸ்.காசிக்குமார் குடும்பத்தார் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள், அரசு அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 250 போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் செய்திருந்தனர்.
தெப்ப திருவிழா
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன் ஆலோசனையின் பேரில், கோவில் நிர்வாக அலுவலர் கார்த்திசெல்வி மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.