நாகர்கோவிலில் வில்லுப்பாட்டு கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை


நாகர்கோவிலில் வில்லுப்பாட்டு கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாகர்கோவிலில் வில்லுப்பாட்டு கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் செட்டிகுளம் சகோதரர் தெருவை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (வயது 72), வில்லுப்பாட்டு கலைஞர். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் ஆதிலிங்கத்தின் குடும்பத்தினர் குடும்ப கோவிலுக்கு சென்றனர். வீட்டில் ஆதிலிங்கம் மட்டும் தனியாக இருந்தார்.

கோவிலுக்கு சென்றவர்கள் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரு அறையில் ஆதிலிங்கம் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக ஆதிலிங்கம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் சரியாகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த ஆதிலிங்கம் "தான் உயிர் வாழ்வதை விட இறப்பதே மேல்" என உறவினர்களிடம் கூறி அழுது வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதிலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story