அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர், கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி


அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர், கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
x

அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்

அரக்கோணத்தை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 38). திருமணமாகி மனைவி பாத்திமா மற்றும் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்ய யும்போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறி உள்ளதாக கூறி, சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸிடம் மாற்றி தர கேட்டுள்ளார்.அதற்கு முகமதுஇலியாஸ் அலட்சியமாக இருந்ததாக கூறி இடத்தின் உரிமையாளர் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை அறுத்து...

இதனால் முகமது இலியாஸ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குளியலறையில் அவரது அலறல் சத்தம் கேட்கவே குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தனர். அப்போது இலியாஸ் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story