சிறப்பான பணி: 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 18 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 18 போலீசாரின் சிறப்பான பணியை பாராட்டி அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கைது செய்த தண்டையார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், போலீஸ்காரர்கள் ரீகன், உமாபதி, முத்துகுமார், திலீப்குமார், 'போக்சோ' வழக்கில் கைதான நபருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கிடைக்க செய்த கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா (தற்போது ஆவடி போலீஸ் கமிஷனரகம்), பெண் போலீஸ் வைஷ்ணவி, செல்போன் பறிப்பு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபுகுமார், அண்ணாநகர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பெனாசீர்பேகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன், போலீஸ்காரர்கள் பவுன்ராஜ், ஸ்ரீதர், மற்றொரு ஸ்ரீதர், 'இஸ்திரி' பெட்டிகளை திருடிய 2 பேரை கைது செய்த திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சுகுமார், முத்துசாமி, போலீஸ்காரர்கள் சிவகுமார், மணிமுத்து ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கினார்.
3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 9 போலீஸ்காரர்கள் என 18 பேர் இந்த பாராட்டு சான்றிதழை பெற்றனர்.