சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி.பாலாஜி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஷமீம் அகமது சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story