100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம்
100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்களை 100 நாட்களுக்கு ஒரு முறை மாறுதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் மாவட்டத்தில் பல பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் அரசு உத்தரவுப்படி மாறுதல் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரே பொறுப்பாளரே பணியாற்றும் நிலை இருந்து வருகிறது. இதனால் இத்திட்ட பணியில் நடைபெறும் முறைகேடுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்படும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அரசு உத்தரவுப்படி 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story