சமூக சேவகருக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்


சமூக சேவகருக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

சமூக சேவைக்கான விருது பெற வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேனி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவையாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகருக்கு ஒவ்வொரு ஆண்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் கையால் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவையாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, கருத்துருவை தயாரித்து வருகிற 27-ந்தேதிக்குள்(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story