மீன் வளர்ப்பிற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
மீன் வளர்ப்பிற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021- 22– திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவிகிதம் மானியமாக ரூ.3 லட்சம் மானியத் தொகை வழங்கப்படும்.
மேற்கண்ட மானிய தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வருகிற 31-ந்தேதிக்குள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 234-ல் உள்ள உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் அல்லது பெரம்பலூர் எஸ்.கே.சி. காம்பிளக்சில் மேல்தளத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திலும் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699, 228699 என்ற தொலைபேசி எண்களிலும், 6381344399 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.